சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்

கோவிட் -19 கொடுப்பனவை நிறுத்தியமை மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார தொழிற்சங்க கூட்டணி ஐந்து மணி நேர வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கோவிட் சிகிச்சை வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை ஆகியவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மதியம் முதல் 12.30 மணி வரை அனைத்து மருத்துவமனைகளின் எதிரிலும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாது.

பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை எனக்குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், தொடர் வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply