கனடாவில் வெப்பம் அதிகரிப்பு – அதிகமான வயோதிபர்கள் பலி

பிரித்தானியா, கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே கனடா வானிலை துறை எச்சரித்திருந்த நிலையில், கனடாவில்   வரலாறு காணாத வகையில்   வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

இதையடுத்து கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 70 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

அதே போல் “வான்கூவர் புறநகர் பகுதிகளான பர்னபீ, சர்ரீ ஆகிய பகுதிகளில் மட்டும் வெப்ப தாக்கம் காரணமாக 69 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நகர காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.