கோவாக்சின் தடுப்பூசி உடன்பாட்டை இரத்து செய்கிறது பிரேசில்

இந்தியாவில் பாரத் பயோடெக்(Bharat Biotech’s) நிறுவனம் தயாரிக்கும் (Covaxin) கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இருப்பதாக பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலை ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஏன்என்ஐ தகவல் வெளியிட்டிருக்கிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து சுமார் 2 கோடி டோஸ் கோவாக்சின் மருந்துகளை வாங்குவதற்கு பிரேசில் உடன்பாடு செய்து கொண்டிருந்தது.

ஆனால் இதில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, தடுப்பூசி உடன்பாட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் பாரத் பயோடெக் நிறுவனத்துடனான உடன்பாட்டை இரத்து செய்வதற்கு பிரேசில் சுகாதாரத்துறை முடிவு செய்திருக்கிறது.