மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

127 Views

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்: இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில்,  தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

இது குறிதது அவர் உரையாற்றுகையில்,

“மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கின்றன என்றே வேளாண் பெருங்குடி மக்கள் சொல்லி வருகிறார்கள். அதனை உணர்த்துவதற்காக கடந்த ஆண்டு முதல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை; இவ்வளவு நீண்ட காலம் நீடித்ததும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களாட்சிக் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் மரியாதை இதுதானா என்று கேள்வியும் எழுந்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. விவசாயிகள் இந்தச் சட்டங்களை எதிர்த்து 385 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அறவழி போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply