மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

162 Views

95349  மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களின் பிள்ளைகள் பலர் தமிழ் நாட்டிலேயே பிறந்தவர்கள் ஆவர். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லுாரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றேன்” என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply