உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்கூட்டியே இந்தியா எச்சரித்திருந்தது – ரணில்

158 Views

12 2 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்கூட்டியே இந்தியா எச்சரித்திருந்தது – ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெறுவதற்கு பல மணி நேரத்திற்கு முன்னர் இந்தியா இலங்கை காவல் துறையினருக்கு எச்சரித்திருந்தது என ரணில் தெரிவித்துள்ளார்.

ஆனால்  காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தனது தந்தை, ஞாயிறு ஆராதனைக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தார் என குறிப்பிட் டுள்ளார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா விடுத்த எச்சரிக்கை குறித்தே நடவடிக்கை எடுக்காத  காவல் துறையினர் ஹரீன் பெர்னான்டோவின் அப்பாவின் எச்சரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எவ்வாறு எதிர் பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply