அம்பிகா தொடர்பான வெளிவிகார அமைச்சின் அறிக்கை- 161 சமூக செயற்பாட்டாளர் 47 அமைப்புகள் கூட்டாக கண்டனம்

அம்பிகாவின் கருத்து பிரதிபலிக்கின்றது
அம்பிகா தொடர்பான வெளிவிகார அமைச்சின் அறிக்கை: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு 161 சமூக செயற்பாட்டாளர்களும் , 47 அமைப்புக்களும் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உபகுழுவின் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நிகழ் நிலையில் நடைபெற்ற நிலையில், அதில் இலங்கை யின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அந்த அமர்வில் பங்கேற்று நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாகத் தெளிவுபடுத்தி ய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், அண்மைய காலங்களில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலு வலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப் புக்களை வழங்கமுன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். எனினும் அவரது கருத்துக்கள் உள்ளகப் பொறி முறை மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்புக்களின் ஊடாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய- வற்றை உறுதிசெய்வது தொடர்பாகத் தாம் கொண் டிருக்கும் உறுதிப்பாடு தொடர்பில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து 161 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் , 47 அமைப்புக்களும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News