தென் – வட கொரியா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட தகவல் தொடர்பு சேவை

166 Views

698221 1 தென் - வட கொரியா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட தகவல் தொடர்பு சேவை

வடகொரியா – தென்கொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.

தகவல் தொடர்பு சேவையை இரு நாடுகளுக்கிடையே தொடங்குவது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முதலே இரு நாட்டு அதிகாரிகளும் கடிதம் எழுதி வந்தனர். இந்த நிலையில் தற்போது அச்சேவை தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “இரு நாடுகளின் உயர் தலைவர்கள் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கிடையே  தகவல் தொடர்பு சேவை நேற்று முதல் தொடங்கப் பட்டுள்ளது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனை தென்கொரியா உறுதி செய்துள்ளதுடன், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் தலைவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply