மன்னாரில் உரங்கள் பதுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

241 Views

f58af9fc farmers edited மன்னாரில் உரங்கள் பதுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சேதனப் பசளை உற்பத்திகள் ஊக்குவிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில்  பெரும்  உரத் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

“ஒரு அந்தர் உரம்  6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதோடு பெரிய கடைக்காரர்கள் சிலர் உரங்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் சிறுபோக நெற் பயிர்களுக்கும் மேட்டு நில பயிர்களுக்கும் தேவையான அளவு பசளைகள்  போடப்படாததால் விளைச்சல்கள் குறைவாகவே காணப் படுகின்றது.

விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில் உர வகைகள் பத்துக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உரிய அதிகாரிகள் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளார்கள்

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply