ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டால், “விரைவில்” விமானங்கள் இரத்து செய்யப்படக்கூடும் என எச்சரித்த சர்வதேச எரிசக்தி முகாமையின் (IEA) தலைவர் ஃபாத்திஹ் பிரோல், அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு அளித்த பேட்டியில், “ஐரோப்பாவிடம் சுமார் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட மூடப்பட்டதால் “நாம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி” உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரோல் கூறினார். “கடந்த காலத்தில், ‘டைர் ஸ்ட்ரெய்ட்ஸ்’ (Dire Straits) என்ற ஒரு குழு இருந்தது. அது இப்போதும் ஒரு ‘டைர் ஸ்ட்ரெய்ட்’ ஆக உள்ளது, மேலும் இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு மோசமாக உலகெங்கிலும் உள்ள பொருளாதார வளர்ச்சிக்கு தடையாகவும் , பணவீக்கத்திற்கு காரணமாகவும் அமையும்”
“இதன் தாக்கம் பெட்ரோல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, மின்சார விலை உயர்வு” என்பதாக இருக்கும். இதனிடையே, அமெரிக்க கருவூலம், இருபதுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களைக் குறிவைத்து, ஈரானின் எண்ணெய் தொழில் மீது ஒரு புதிய அலைத் தடைகளை விதித்துள்ளது. ஸ்காட் பெசென்ட் இந்த நடவடிக்கையை, “ஈரானிய மக்களின் இழப்பில் இலாபம் ஈட்ட முயற்சிக்கும்… ஆட்சி உயரடுக்கினரை” குறிவைக்கும் “பொருளாதார சீற்றம்” என்று வர்ணித்தார்.
இந்தத் தடைகள் ஏற்கனவே உள்ள. அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றன, சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெய் உலகச் சந்தைகளை அடைய அனுமதித்த 30 நாள் விலக்கு ஏப்ரல் 19 அன்று காலா வதியாகிறது, மேலும் அது நீட்டிக்கப்படாது எனவும் தெரி வித்துள்ளார்.



