தடுத்து வைக்கப்பட்ட அகதிகள்: 2016ம் ஆண்டு பப்பு நியூ கினியாவின் மனுஸ் தீவில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் சட்டவிரோதமானது எனக் கூறிய பப்பு நியூ கினியா உச்ச நீதிமன்றம் அம்முகாமை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா- பப்பு நியூ கினியா இடையேயான ஒப்பந்த முறிவு ஏற்பட்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை தடுத்து வைப்பதற்கான இடமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் ‘பப்பு நியூ கினியா’ செயல்பட்டு வந்தது.
தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியா தீவில் சுமார் 118க்கும் மேற்பட்ட அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில், வரும் ஜனவரி 1, 2022 முதல் இந்த கடல் கடந்த தடுப்பில் உள்ளவர்களை நிர்வகிப்பது தொடர்பான முழு முடிவும் பப்பு நியூ கினியா அரசாங்கத்தை பொறுத்தது என அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார்.