சிங்கப்பூர் நிரந்தரவாசியாவதற்கும் வேலை அனுமதி அட்டைகள், நீண்டகால குடிநுழைவு அட்டைகளுக்கும் விண்ணப்பம் செய்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி கட்டாயம் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். வேலை அனுமதி அட்டையைப் புதுப்பிப்பவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், 12 வயதும் அதற்கும் குறைவான சிறுவர்களும் மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறாதவர்களும் இதற்கு விதிவிலக்கு.இந்தப் புதிய விதிமுறை குறித்து கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.