இலங்கையின் கடன்தொடர்பான பொது இணக்கப்பாட்டினை எட்டுவதற்காக சீனாவுடன் ஈடுபாட்டை வெளிப்படுத்த தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது பிரான்ஸ் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் அனைத்து கடன்வழங்குநர்களுடனும் பொதுவான பொறிமுறையொன்று குறித்த இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார் என அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடன்மறுசீரமைப்பிற்கு அப்பால் இந்தோ பசுபிக் குறித்தும் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.