பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.