எமது கட்சி மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.
தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். நாமும் தயாராகவே இருக்கின்றோம்” என்றார்.