சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு ஹட்டனில் இன்று பேரணி

சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு, ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கி நிலமற்றோருக்கான நிலம் எனும் தொனிப்பொருளிலேயே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மலையக மக்களுக்கு விவசாய காணி வழங்க வேண்டும் என்றும், வீடு கட்ட 20 பேர்ச் காணி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

Tamil News