ராஜீவ் காந்தி கொலை வழக்கு -மூவர் உயிரைக் காக்க தீக்குளித்த இளம்பெண் செங்கொடியின் நினைவு நாள் இன்று  

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, தமிழகத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள் இன்று.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் நிராரிக்கப்பட்டு, 2011ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் திகதி  தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

த.தே.கூட்டமைப்பின் இரட்டையர்களின் போக்கு தமிழர் நிலையில் ஒரு கேள்வி ஏற்படுகின்றது! | ILC

இந்தத்   தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம்  தழுவிய அளவில் பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில்,  மூவரின் உயிர் காக்கக் கோரி இளம் பெண்ணான செங்கொடி, தனதுயிரை மாய்த்துக் கொண்டது, தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தியாகி செங்கொடி பற்றிய சில குறிப்புக்கள்…

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடய மகள் செங்கொடி, காஞ்சிபுரம் ‘மக்கள் மன்றம்’ என்ற அமைப்பில் இணைந்து பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் அவர் பங்கேற்றார்.

இதன் தொடர்ச்சியாக,   காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். ஒரு கைப்பையுடன் வந்த செங்கொடி, அதில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், ஓடி வந்து உடனடியாக தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

செங்கொடியிடம் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில்,

senkodi 2 ராஜீவ் காந்தி கொலை வழக்கு -மூவர் உயிரைக் காக்க தீக்குளித்த இளம்பெண் செங்கொடியின் நினைவு நாள் இன்று  

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்”. –  இப்படிக்கு தோழர் செங்கொடி என்று இருந்தது.

“எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்கிறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி,முடிச்சுட்டு போயிடறோம். இதனால் யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

செங்கொடி

ilakku-weekly-epaper-144-august-22-2021