கோவிட் தரவுகளே பொய்யென்றால் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்…? இரா.சாணக்கியன்  கேள்வி

149 Views

IMG 20210828 112353 1 கோவிட் தரவுகளே பொய்யென்றால் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்…? இரா.சாணக்கியன்  கேள்வி

இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்: கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இதே அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட  யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தற்போது ஏற்படுகின்ற  கொரோனா தொற்றின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நோயளர்களின் எண்ணிக்கை இலங்கையின் சுகாதார அமைச்சின் கொரோனா பிரிவினால் வெளியிடப்படுகின்றது. அதில் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4011 ஆகவும், கல்முனை பிராந்தியத்தில் 2602 ஆகவும், திருகோணமலையிலே 2906 ஆகவும் காட்டப் படுகின்றது. மொத்த தொற்றாளர்களாக மட்டக்களப்பில் 4811, கல்முனையில் 3916, திருகோணமலையில் 3561 என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் இரட்டையர்களின் போக்கு தமிழர் நிலையில் ஒரு கேள்வி ஏற்படுகின்றது! | ILC

ஆனால் உரிய பிராந்தியங்களில் இருந்து வெளியிடப்படும் தரவுகளைப் பார்த்தால் கொரோனா மூன்றாவது அலையிலே மட்டக்களப்பில் 14882 தொற்றாளர்கள், கல்முனையில் 4761, திருகோணமலையிலே 3516 தொற்றாளர்கள். இது மூன்றாவது அலையில் மாத்திரம். கொழும்பில் காட்டப்படுகின்ற தரவுகளுக்கும் மாவட்ட ரீதியான தரவுகளுக்கு சுமார் மூன்று மடங்கிற்கும் குறைவான தரவுகள் காட்டப்படுகின்றன.

அதேபோல் கொரோனா மரணங்களைப் பார்த்தோமானாலும், 2021.08.26ம் திகதிய தரவின் படி மட்டக்களப்பில் 24 மணிநேரத்தினுள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, திருகோணமலையிலே 07, கல்லனையில் 01 என்று காட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் நம்ப முடியுமா?

நோயாளிகளின் எண்ணிக்கையில் பொய்யான தரவுகள் வெளியிடுகின்றார்கள் என்றால், இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உண்மையானது என நம்ப முடியும்? கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே இவ்வாறு என்றால் இறுதி யுத்தத்திலே இறந்தவர்கள், யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை நாங்கள் எவ்வாறு நம்புவது? இதே அரசாங்கம் தான் அந்த நேரத்திலும் இருந்தது.

இந்த உயிரிழப்புகள் அனைத்துக்குமான காரணம் தடுப்பூசி உரிய காலத்தில் வழங்காமை” என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply