சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்: இயல்புநிலை பாதிப்பு

132 Views

சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும்

சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று முதல் வரும் 9 திகதி   வரையிலான 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சென்ட்ரல், சைதாப்பேட்டை, எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு: சென்னையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208, வாட்ஸ்அப் – 9445477205 ஆகிய எண்களில் மக்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்: இயல்புநிலை பாதிப்பு

Leave a Reply