இலங்கை : 20 ஐ நீக்க கோட்டா இணக்கம்? – பசிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் அபாயம்

20 ஐ நீக்க கோட்டா இணக்கம்

20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் பசிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஐ மீண்டும் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவிடமிருந்து ஏற்கனவே நிதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  கூறப் படுகின்றது.

  Tamil News