இலங்கையில் இனிமேல் முகக் கவசம் கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் இனிமேல் முகக் கவசம் கட்டாயமில்லை என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை இன்று விடுத்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.

எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News