இந்தியாவை நோக்கி வரும் ‘குவாட்’ உறுப்பு நாடுகள்-இதயச்சந்திரன்

குவாட் உறுப்பு நாடுகள்

இந்தியாவை நோக்கி வரும் குவாட் உறுப்பு நாடுகள்

நேற்று ஜப்பான் பிரதமர் நேரில் வந்தார். $42பில்லியனிற்கு முதலீடு செய்ய உடன்பட்டார். இன்று மெய்வெளி ஊடாக அவுஸ்திரேலிய பிரதமர் மொரிசன் வந்தார். Aus$280 மில்லியன் முதலீடு இந்தியாவிற்குள் வருமென்றார்.இருவரும் ரஷ்யாவைச் சாடினார்கள். ஆனால் மோடி அதற்குப் பதிலளிக்கவில்லை.’ சீனாவிற்கு எதிரான மூலோபாயக்கூட்டிற்கு ஓகே. ஆனால் ரஷ்யாவிற்கெதிரான அமெரிக்கக் கூட்டிற்கு சிவப்புக் கொடி’. ஆனால் விரைவில் சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு நேரில் வருகிறார். அவர் $100 பில்லியன் அளவில் இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

ரஷ்யாவின் லவ்ரோவும் வரலாம். இந்தியாவிற்கு S500 வான்பாதுகாப்பு பொறிமுறையை வழங்கலாம். உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.இனி பாக்கிஸ்தானையிட்டு பயமில்லை. ரஷ்ய-இந்திய-சீனக் கூட்டு ஏற்படாமலிருக்க ‘குவாட்’ வருகிறது. இனி மீதமுள்ள கமலா ஹரிஸ் அக்காவும் வருவார்.

உலக reserve நாணயமான டொலரிற்கு ஆபத்து வந்தால் மேற்குலக நிதி ஆளுமைக்கு உட்பட்ட எல்லோரும் ஒன்று சேருவார்கள்.

1650 களில் டச்சின் Guilder,1850 களில் பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண்ஸ்,1944 இல் அமெரிக்க டொலர்,2022 இல் எது?.யூரோவா? சீன யுவனா? பார்ப்போம்.

Tamil News