மாகாண வைத்தியசாலைகள் இனிமேல் மத்திய அரசின் கீழ்? அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

526 Views

மாகாண வைத்தியசாலைகள் இனிமேல்

மாகாண வைத்தியசாலைகள் இனிமேல் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாளாந்தம் வைத்தியசாலை களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைக ளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர் களை கருத்திற்கொண்டு மக்க ளின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.

எனினும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமாக உள்ள வைத்தியசாலைகள் உள் ளிட்ட நிறுவனங்களை சுகா தார அமைச்சின் கீழ் கொண்டு வரும் விடயத்தில் உள்ள சிக் கல்கள் குறித்து கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது உள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர் காலத் துக்கு இது சாதகமாக அமையும் எனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, அபிவிருத்தி என்ற போர்வையில் ஏற்கனவே வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தி யசாலைகளை கையேற்க மத் திய அரசு மேற்கொண்ட முயற் சிகளுக்குக் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இது 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங் கப்பட்ட சில அற்ப-சொற்ப அதிகாரங்களையும் தட்டிப் பறிக்கும் முயற்சி என வடக்கு, கிழக்கில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன.

Tamil News

Leave a Reply