தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம்

353 Views

தமிழகத்தில் நாளை முதல்

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு. பொதுப்போக்குவரத்து இயங்காது, மெட்ரோ ரெயில், பேருந்து போக்குவரத்துக்கு தடை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட உத்தரவு எனத் தகவல்.

Leave a Reply