மாகாணசபை முறைமை முழுமையாகத் தோல்வி – மங்கள

190 Views

128467aa 285a9ae0 mangala samaraweera  மாகாணசபை முறைமை முழுமையாகத் தோல்வி - மங்களதமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வி யடைந்திருக்கின்றது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக் காட்டியுள்ளார்.

அதுமாத்திரமின்றி  நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் பொறி முறையின் ஓரங்கமாகக் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால்  ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தையும் அது குறித்த சட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்காது இருப்பதற்கான காரணம் சர்வவேதச அழுத்தங்கள் ஏற்படக் கூடும் என்பதனாலையே ஆகும். இருப்பினும் தற்போது அந்த அலுவலகத்திற்கான நிதி வழங்கல்  நிறுத்தப் பட்டிருப்பதன் விளைவாக அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் ஒரு பலம் மிக்க சக்தியுடன் மட்டும் நெருங்கிப் பயணிப்பதுடன் ஏனைய பலம் வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச் செயற்படுவதனால்  எதிர்வரும் காலத்தில்  எமது நாடு உலக அரசியல் நெருக்கடி யொன்றுக்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவும் சீனாவும் மிக முக்கிய உலக பொருளாதார சக்திகளாக வலுப் பெற்று வரும்  நிலையில், அவற்றுடன் சமாந்தரமான பொருளாதாரத் தொடர்புகளையும்  நெருக்கத்தையும் பேணுவது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply