சட்டவிரோத மணல் கடத்தல் -அரியாலையில் உழவூர்தி மீது துப்பாக்கிச்சூடு

137 Views

21 60fb92e88304b சட்டவிரோத மணல் கடத்தல் -அரியாலையில் உழவூர்தி மீது துப்பாக்கிச்சூடுயாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவூர்தி மீது இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மணல் ஏற்றி வந்த உழவூர்தியை படைத் தரப்பினர் தடுத்து நிறுத்திய போது நிறுத்தாது சென்றதாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், உழவூர்தியிலிருந்த 03 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply