இலங்கை:அரச தலைவர் அலுவலக வீதிக்கு ‘இலஞ்ச வீதி’ யென பெயர் சூட்டிய போராட்டக்காரர்கள்

கொழும்பு காலி முகத்திடலில் 'இலஞ்ச வீதி'

கொழும்பு காலி முகத்திடலில் ‘இலஞ்ச வீதி’

கொழும்பு காலி முகத்திடலில் அரச தலைவர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிக்கு போராட்டக்காரர்கள் இலஞ்ச வீதியென (Bribe road) பெயர் சூட்டியுள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம“ எனும் பெயரிலான கிராமத்தை உருவாக்கியுள்ள போராட்டக்காரர்கள், கோட்டாபயவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த 20 நாட்களுக்கு மேலாகப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.