திருகோணமலை எண்ணெய்க் குத ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

360 Views

ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் சீனக்குடா எண்ணெய் தள பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

ஐக்கிய ஒன்றினைந்த தொழிற்சங்க ஏற்பாட்டில் திருகோணமலை மட்டக்களப்பு சீனக்குடா பிரதான வீதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, இம்ரான் மஹ்ரூப் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 877 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் நெறிமுறையற்றதாகவும், சட்டவிரோத மாகவும் விற்பனை செய்துள்ளதாகவும், இது முந்தைய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை விட பாரிய துரோகம் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு  வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 6ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply