கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை?

494 Views

இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை

இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை: கனடாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தோர், அகதிகள், பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று, இலங்கைச் சிறுவன் ஒருவனின் புன்னகையை மீட்பதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Denuwan P Rambuka Liyanage (5) என்ற சிறுவனின் குடும்பம், சமீபத்தில்தான் இலங்கையிலிருந்து கனடாவிலுள்ள North Perth என்ற இடத்தை வந்தடைந்துள்ளது. ஒரு அபூர்வ பிரச்சினை காரணமாக Denuwan பற்கள் அனைத்தையும் இழந்துவிட்டான். அவனால் சரியாக சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. அவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார் 5,000 டொலர்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்போதுதான் அவனது குடும்பம் கனடா வந்தடைந்துள்ள நிலையில், Denuwanஇன் குடும்பத்திடம் அவனது அறுவை சிகிச்சைக்காக போதுமான பணம் இல்லை.

இந்நிலையில், Denuwanக்கு உதவுவதற்காக, ஒன்ராறியோவிலிருந்து இயங்கும் The Multicultural Association of Perth- Huron என்னும் அமைப்பு, 5,000 கனேடிய டொலர்கள் திரட்ட முன்வந்துள்ளது.

முக்கியமாக, அவனது புன்னகையை மீண்டும் கொண்டு வர உதவப்போகிறோம் என்றார், Multicultural Association அமைப்பின் நிறுவனரான Gezahgn Wordofa.

புதிதாக கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களுக்கு உதவ உறுதி கொண்டுள்ளது எங்கள் அமைப்பு என்கிறார் Wordofa.

அதற்காக அவர் மக்களின் உதவியை கோரியுள்ளார்.

Denuwanக்காக நிதியுதவி கோரப்பட்டுள்ள நிலையில், தேவையான அளவைவிட அதிக நிதி திரண்டால், அதை பல் சிகிச்சை தேவைப்படும் மற்றவர்களுக்கு பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார் Wordofa.

Tamil News

Leave a Reply