சர்வகட்சி ஆட்சி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

58 Views

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளும் நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வரைவு மற்றும் எதிர்வரும் காலங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவுசெலவுத்திட்டம் குறித்து ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply