ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லை; ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை மீறியதா அரசு?

124 Views

ஜனாதிபதி பிரதமர் நாட்டில் இல்லை
ஜனாதிபதி பிரதமர் நாட்டில் இல்லை. இந்த நிலையில் தற்போது தேசியப் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பில் பேசிய அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் தற்போது கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுட்டிக்காட்டினார்.

தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை பொருத்தமான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறும்வகையில் இது அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்னார்.

இதேவேளை நாட்டில் உண்மையில் கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துவிட்டதாக பொது மக்களிடம் கூறப்பட்டு வருகிறது, ஆனால் உண்மையில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையே 50 சதவிகிதம் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே உண்மையான நிலைவரத்தை அறிய பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆக அதிகரிக்குமாறும் ஹர்ஷன ராஜகருணா அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply