ஐ. நா. பொறிமுறையை இலங்கை அரசு ஏற்காது; மீண்டும் வலியுறுத்தினார் பீரிஸ்

345 Views

பொறிமுறையை இலங்கை அரசு ஏற்காது
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை நிறுவ முயற்சிக்கும் தற்காலிக பொறிமுறையை இலங்கை அரசு ஏற்காது. இந்தப் பொறிமுறை, ஐ. நா. சாசனத்தின் உயிர்ப்பு – ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை.

இவ்வாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்.

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லண்டுடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்றும் இதன்போது பொதுநலவாய நாடுகளுடனான பேச்சு மற்றும் ஈடுபாட்டுக்கான இலங்கையின் செயலுறுதிப்பாட்டை இலங்கை உறுதிப்படுத்தினார் எனவும் வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்க்கின்றது. சதுப்புநில மறுசீரமைப்பில் வெற்றி பெற்றுள்ள இலங்கை, நீலப்பசுமை சாசனத்தின் தலைமை நாடாக மேலும் உருவெடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட விவசாய உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி அண்மையில் ‘காலநிலை மற்றும் பசுமைப் பொருளாதாரம்’ எனும் முன்முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளது.

தனித்துவமான மற்றும் உற்சாகமூட்டும் வகையில், அனைத்து உறுப்பு நாடுகளும் பொதுவான நோக்கமொன்றை அனுபவிக்கும் பன்முகத்தன்மையின் கலவையே பொதுநலவாயம். அதன் உறுப்பினர்கள் அனைவரும் பொதுவானதொரு சட்டப் பின்னணியின் நன்மையைக் கொண்டுள்ளனர், எனினும் அபிவிருத்தியின் பல்வேறு வழிகளைப் பின்பற்றினர்.

நல்லிணக்கம் தொடர்பில் நாட்டில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் ஸ்கொட்லண்டுக்கு வெளிநாட்டு அமைச்சர் விளக்கினார். இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாவதுடன், உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது.

மனித உரிமைகள் பேரவை நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply