பொதுநலவாய செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்துள்ளார்.

இதன்போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளை பகிர்ந்து கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் பொதுநலவாய நாடுகளின் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

பொதுநலவாய அமைப்பினுள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்ரிசியா ஸ்கொட்லாந்துடன் கலந்துரையாடியுள்ளார்.