முள்ளைலைத்தீவு குருந்தூர் மலை சார்ந்த காணி விடயம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி அவர்கள் “வடக்கிலே குறுந்தூர் மழை தமிழ் பௌத்தம் சார்ந்தது” என்றதோடு தொல்லியல் திணைக்கள ஆணையாளரை பார்த்து “மகா விகாரையை விட அதிக காணி தேவையா?” என கேள்வி எழுப்பியதோடு கடும் தொனியில் “அமைச்சரவை முடிவை நிறைவேற்ற வேண்டும்”,” எனக்கு வரலாற்று கற்றுக் கொடுக்க வேண்டாம்” எனக் கூறியதைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்கள ஆணையர் பதவி விலகியுள்ளார்.
இது தமிழர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. சிங்கள பௌத்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சனாதிபதிக்கு எதிராக கருத்துக்களையும் வெளியிடுகின்றனர்.
பிந்திக் கிடைக்கும் செய்தியின்படி ஜனாதிபதி எல்லாவல மேதாநந்த தேரர் அவர்களுக்கு அவசரமாக அனுப்பிய கடிதத்தில் “தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்திய குருந்தூர் மலை பிரதேச காணிகளில் நான் எவரையும் குடியமர்த்த மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே 1933 மே 12ஆம் திகதி வர்த்தமானியில் “குருந்தூர் மலை” என்று குறிப்பிடப்படுகின்றது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் குருந்தூர் விகாரை எனக் கூறுவதோடு நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை நிர்மாணிப்பதை தொடர்கின்றனர். அது மட்டும் அல்ல யாழ் பல்கலைக்கழகத்தின் துறை சார்ந்த நிபுணர்களையும், மாணவர்களையும் ஒன்றிணைத்து அகழ்வு பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் நீதிமன்றம் கட்டளை நடைமுறைப்படுத்தாது சிங்கள பௌத்தர்களை முதன்மையாகக் கொண்ட சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் தொடர்ந்து தம் பணியை முன்னெடுத்து வருகின்றது.
தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் குருந்தூர் மலையை ஆண்டிய பிரதேச காணிகள் மற்றும் திரியாய பகுதியில் உள்ள காணிகள் சம்பந்தமாக தொல்லியல் திணைக்களம் தமது தேவைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற காணிகளின் விஸ்தீரனம் சம்பந்தமாக ஆய்ந்து அறிவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே நேரம் வடக்கில் தொல்லியல் திணைக்களம் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு மூலக்கர்த்தாவாக செயல்படுவர், பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக காரணமானவராக இருப்பவர் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க அவர்களே.அவர் தொடர்பில் ஜனாதிபதி எவற்றையும் கூப்பிடவில்லை. அவருக்கு முதலாவது தண்டனை கொடுக்க வேண்டும்.பதவி விலகுமாறு கூற வேண்டும். ஆனால் இந்நாட்டில் அதனை எதிர்பார்க்க முடியாது. 2021 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புணர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக இருந்தவர் நாட்டின் சட்டங்களையும் சிறைச்சாலை சட்டங்களையம் மீறி கொழும்பு மற்றும் அனுராதப்புறம் சிறைச்சாலைகளுக்குள் பிரவேசித்ததோடு அனுராதப்புறம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை புலங்களில் நிற்க வைத்து அச்சுறுத்தி சுடுவதாக துப்பாக்கியை அவர்களின் நெற்றியில் வைத்துள்ளார். இது தொடர்பாக ஆராயவதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணை குழு அவர் பல்வேறு சட்டமிறல்கள் குற்றங்கள் உள்ளன. அதற்கு ஏற்ற தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியபோதும் இதுவரைக்கும் அது நடக்கவில்லை. வெறுமனே விதுர விக்ரம நாயகா அவர்களுக்கு எதிராக எதனையும் செய்யப் போவதில்லை என்பது மட்டும் உண்மையே.
அதே நேரம் தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணை குழு முன்மொழியும் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. அதற்கு மேற்கூறிய உதாரணம் போதுமானது. நாட்டில் எத்தனையோ ஆணை குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் அறிக்கைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன என்பதுவே வரலாறு.
தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணை குழுவும் சர்வதேசத்தையும், தமிழர்களையும் ஏமாற்றுவதற்கு அன்றி வேறொன்று அல்ல. தற்போதைய ஜனாதிபதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு. 13ம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் எனக் கூறியது போது சிங்கள பௌத்தப்பிக்குள் அதனை எதிர்த்து பெருந்திரளாக ஒன்றுகூடி நாடாளுமன்றம் வரை ஊர்வலம் சென்றதோடு அங்கு பதிமூன்றாவது திருத்த நகலையும் தீயிட்டு கொளுத்தினர். கொழும்பில் போராட்டங்களில் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்யும் படைத்தரப்பு அமைதி காத்ததோடு போராட்ட பிக்குகளுக்கு பாதுகாப்பாக அவர் அவர்களுக்கு பின்னால் ஓடிச் சென்றதை நாம் கண்டோம்.சனாதிபதிஆணை குழு அமைத்திருப்பதும் வாக்கு மற்றும் ஏமாற்று அரசியலே.
13-ஆம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளை உள்ளடக்கி தேசிய காணிக் கொள்கை குழு அமைக்காது இதுவரை இழுத்தடிப்பு செய்யும் தெற்கின் ஆட்சியாளர்கள் மத்தியில் தற்போதைய ஜனாதிபதி தெற்கின் பிரதிநிதிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவிடம் தேசிய காணிக் கொள்கை உருவாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுவே தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரம்.
இக்குழு விசேடமாக வடகிழக்கில் சிங்களமயமாக்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் கொள்கைகளையே உருவாக்கும். அதன் மூலம் வடகிழக்கில் சிங்கள பௌத்த தேவைகளையும், விரிவாக்கத்தையும் அமுல்படுத்தலாம்.இதுவே சனாதிபதியின் நோக்கம்.
இதற்கு முன்னோடியாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் “வடகிழக்கில் நிறுவப்படும் விகாரர்களை இனவாத கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தபோதே நாட்டிலும் வடகிழக்கிலும் எத்தனை விகாரைகள் அமைக்கப்பட வேண்டும் என கூறியது நினைவில் உள்ளது.
கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் சிங்கள பேரினவாதமே கொலோச்சுகின்றது. அதன் காவலர்களே நாட்டின் செல் நெறியை தீர்மானிக்கின்றனர். அதற்கு ஏற்பவே அரசியல்வாதிகள் தம் பயண பாதையை தீர்மானிக்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டில் தம் தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும்.