ஆப்கனில் வறுமை: ஓராண்டில் 6.35 இலட்சம் பேர் புலம்பெயர்வு: ஐ.நா. தகவல்

409 Views

6.35 இலட்சம் பேர்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 6.35 இலட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

ஆப்கனில் 2021ம் ஆண்டில் ஏற்பட்ட போர், வறுமையால் இதுவரை 6.35 இலட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து உள்ளனர். குறிப்பாக, காபூலில் இருந்து வெளியேறிய 1,300 பேருக்கும், குனார் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 9,300 பேருக்கும் ஐ.நா., சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், மைதான் வார்தாக் மாகாணத்தைச் சேர்ந்த 63 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க இருக்கிறோம்.

புலம்பெயரும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளும் மருத்துவ, கோவிட் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றையும் வழங்க ஐ.நா., அதிக முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply