உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு

உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வருவதற்​கான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு உதவி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக பிரதமர் நரேந்​திர மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக​வும், அதனை அதிபர் விளா​டி​மிர் புதின் வரவேற்​றுள்​ள​தாக​வும் ரஷ்யா தெரி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாட்​டின் போது ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறிய​தாவது: உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளுக்கு இது​வரை எந்​தப்பலனும் கிடைக்​க​வில்​லை.

இந்நிலை​யில், மோடி, ஜி ஜின்​பிங் உக்​ரைன் போரை நிறுத்த விருப்​பம் தெரி​வித்​துள்ள செய்தி முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்க்​கப்​படு​கிறது. குறிப்​பாக, மாநாட்​டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்​பிங் மற்​றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்​சி, உலக அரங்​கில் அவர்​களின் நெருக்​க​மான உறவை​யும் ஒற்​றுமை​யை​யும் வெளிப்​படுத்​தும் வகை​யில் அமைந்​திருந்​தது எனக் கூறப்படுகின்றது.