‘இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும்’ – ஜனாதிபதி

எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும். ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.