ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9S-GUC என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட குறித்த விமானத்தில் 12 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக Régie des Voies Aériennes (RVA) நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கின்ஷாசா-என்டோலோவில் இருந்து கிக்விட் மற்றும் இலேபோ நோக்கி உள்ளூர் விமான சேவையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.



