இன்று (26) சனிக்கிழமை பேரெழுச்சியாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தளமான வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலையினை வைத்து பௌத்த பிக்கு தலைமையில் விசேட பௌர்ணமி தின வழிபாடுகள் நடைபெற்று, வழிபாட்டின் பின்னர் சிலை மீண்டும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.



