இறந்தோருக்கு அஞ்சலி: ஆயர், அருட்தந்தையர்களுக்கு காவல்துறையினர் தடை கோரி நீதிமன்றில் மனு

காவல்துறையினர் தடை கோரி நீதிமன்றில் மனு

‘யுத்ததால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவது தொடர்பில்,’ மட்டக்களப்பு தலைமையகப்  காவல்துறையினர் தடை கோரி நீதிமன்றில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்தந்யைர்கள், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டு நீதி மன்றுக்கு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப்  காவல்துறை பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் பி.கே.கெட்டியாராச்சி அவர்களினால் இந்த மனு இன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும நாட்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் வடக்கு கிழக்கு ஆயர்களினால் 20ம் திகதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கை என்பவற்றை மைய்படுத்தி இத் தடையுத்தரவு கோரும் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

 

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad இறந்தோருக்கு அஞ்சலி: ஆயர், அருட்தந்தையர்களுக்கு காவல்துறையினர் தடை கோரி நீதிமன்றில் மனு