ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை காணாதது போல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது என மாலைதீவின் அதிபர் மொஹமெட் மொய்சு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கடந்த புதன்கிழமை(25) பேசும்போது தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்றது. ஊடகவியலாளர்களை வேண்டு மென்றே தாக்குகின்றது. காசாவில் இருந்த அல்ஜசீரா ஊடகத் தின் அலுவலகத்தையும் அது மூடி
யுள்ளது. இதுவரையில் 110 ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் காசா அதிகாரிகளின் தகவல்களின் அடிப் படையில் அதன் எண்ணிக்கை 173 ஆகும்.
வீடுகள் வைத்தியசாலைகள், பாடசாலைகள் அழிக்கப்படுகின் றன. பெருமளவான பொதுமக் களை இஸ்ரேல் படுகொலை செய்கின்றது. இந்த வாரம் லெபனானிலும், காசாவிலும் பெருமளவான மக்கள் கொல் லப்பட்டுள்ளனர். உலகின் பொதுக் கட்டமைப்பு சிதைகின்றது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள செயற்திறனற்ற நிரந்தர உறுப்புரிமை கொண்ட மற்றும் வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்த நாடுகளும் தமது பதவியை துறக்கவேண்டும்.
வீட்டோ அதிகாரத்தை இஸ்ரேலை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். இஸ்ரேலின் இனஅழிப்பை நிறுத்துவதற்கு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் பொதுச்சபையில் பேசும் போதும் அவர் இஸ்ரேலின் இனஅழிப்புக்கு எதிரான நடவடிக்கை வேண்டும் என தெரிவித்திருந்தார்.