கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் மக்கள் போராட்டம் 

93 Views

குறிஞ்சாக்கேணியில் மக்கள் போராட்டம் 

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று நடந்த  படகு விபத்தையடுத்து  இன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

குறிஞ்சாக்கேணியில் மக்கள் போராட்டம் காரணமாக குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக தற்காலிகமாக  இந்த பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளது.

எனினும்  நேற்று நடந்த விபத்தையடுத்தே இந்த பேருந்து சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சேவையை முன்னரே ஆரம்பித்திருந்தால்  இறப்புக்களை தடுத்திருக்கலாம்  எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்ப்பாளர்களிடம் பேசிக் கலந்துரையாடி, எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து எதிர்ப்புக் கைவிடப்பட்டது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் மக்கள் போராட்டம் 

Leave a Reply