வரும் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலியாகலாம்-WHO

324 Views

7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலி

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலியாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது.

அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்   கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வரும் மார்ச் 2022-க்குள் 52 நாடுகளில் 49 நாடுகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகக்கடுமையான அல்லது மோசமான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின் முக்கிய காரணியாக கொரோனா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுக்கும் கட்டாய தடுப்பூசித் திட்டம், ஊரடங்கு போன்றவைகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 வரும் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலியாகலாம்-WHO

Leave a Reply