கொரோனா அச்சுறுத்தல் – வளர்ப்பு விலங்குகளை தாக்குமா?

வளர்ப்பு விலங்குகளை வளர்ப்போருக்கு கோவிட் 19, தொற்று ஏற்பட்டால் தங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு பரவச்செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவுகின்ற புதிய வடிவமாக இருக்கலாம்.  அவ்வாறு பரவினால் இப்பிராணிகள் கொரோனாவை மிகப்பெரிய அளவில் பரவச்செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். கனடாவில்  நடந்த ஆய்வில் கொரோனா பாதித்தவர்களுடை வளர்ப்பு பிராணிகளின், இரத்த மாதிகளை  ஆய்விற்கு உட்படுத்திய போது சுமார்  17 பூனைகள் 18 நாய்களில்  ஒன்றைத் தவிர  மற்றவற்றுக்குப்  பாதிப்பில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது.

மீண்டும்  அவற்றிக்கே  நோய்  எதிர்ப்புத் திறணை  ஆய்விற்கு  உட்படுத்திய போது  அதன்  உடல்களில்  புதிய  எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Paw-ly in the pandemic: pets can catch virus from owners - France 24

இருப்பினும் ஒரு சிறிய குழுவினரிடையே  மட்டும் நடத்தப்பட்டதால் வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்போர் கவலையடையத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும்  உலகளவில்  ஐரோப்பாவில்  நாய்கள்  மற்றும்  பூனைகள் அமெரிக்காவில் ஒரு புலி கொரோனாவினால்  பாதிப்படைந்தது. உலக சுகாதார நிறுவனம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுவது உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில்  கடந்த  மே மாதம் mink என்ற விலங்கு மூலம் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.