இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: புதுச்சேரி முதல்வருடன் கலந்துரையாடல்

553 Views

காரைக்கால் இடையே பயணிகள் கப்பல்

இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள்  செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆலோசனை தொடர்பாக புதுச்சேரிமுதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இலங்கை -காரைக்கால் மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகப் பேசினர். காலைக்கால் – இலங்கை  இடையே கப்பல் போக்குவரத்தினைத் தொடங்குவது தொடர்பாக  ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply