ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்

மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர்

ஈழத்தின் மிக முக்கியமான மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் (வயது – 72) இன்று (16) திருகோணமலையில் காலமானார்.

யாழ்ப்பாணம் மட்டுவில் சாவகச்சேரியில் 1949-05-25 ல் பிறந்த இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சு,  வாசிப்பு என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்.

நந்தினி சேவியர் அவர்களின் பிரிவு அவரை நேசித்த இலக்கிய நண்பர்களுக்கு பெரும் துயர். இடையிடையே நோய் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தாலும் தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் இயங்கி வந்தார். வாழ்வில் தளராத நம்பிக்கை உடையவர். ஈழத்தின் புகழ்பூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான நந்தினி சேவியர்  கடந்த ஆறு நாட்களுக்கு முதலும், நான்கு நாட்களுக்கு முதலும் மரண சாசனம் போல ஒருபதிவை தனது முகநூலில் சேர்த்திருந்தார்.

நம்மைச் சுற்றி நாளும் நிகழும் முதியோர்களின் மரணம் முற்றிலும் இயற்கையானது தானா? ஏன் அது குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை ? குறிப்பாக இரண்டு தடுப்பூசிகள் போட்டபின்னர் பல முதியவர்கள் இறந்துள்ளார்கள். இது குறித்த தகவல் திரட்டலையோ, பகுப்பாய்வையோ நாடலாவிய ரீதியில் செய்யாமல் இருப்பது என்ன நியாயம்!?

மருத்துவத் துறையினரிடம் கேட்டால், ஒரே பதில்,அவர்களுக்கு வேறு வேறு நோய்கள் இருந்தன என்பது. சரி  வேறு வேறு நோய்களுடன் அவர்கள் உயிருடன் இருந்தார்களே என்றால், இல்லை ஊசி போடாவிட்டாலும் அவர்கள் இறந்திருப்பார்கள் என்பது போல பதிலளிக்கிறார்கள்.

தடுப்பூசி மரணங்களுக்கு மருத்துவத்துறை பொறுப்பில்லையெனில் எதற்காக கட்டாயப்படுத்தி தடுப்பூசிகளைப் போடவேண்டும். என்ற கேள்வியை கேட்டு இருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021