இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க வெளியக பொறிமுறை தேவையில்லை-ஜெயநாத் கொலம்பகே

153 Views

Jayanath Colombage இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க வெளியக பொறிமுறை தேவையில்லை-ஜெயநாத் கொலம்பகே

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க வெளியக பொறிமுறை தேவையில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அத்தகைய பொறிமுறையை அமைக்க கட்டளையிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் உள்ளக பிரச்சினைகள் உள்ளூர் சட்ட அமைப்பு மூலம் தீர்க்கப்படுகின்றன.

இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதிலும், நாட்டு மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் நாடு முன்னணியில் இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply