கொரியாவிலிருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு காகிதங்கள் அன்பளிப்பு

கொரிய வணிக சமூகமும் கொரியர்களும் இணைந்து 11,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அச்சுத் தாள்களை இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இலங்கையில் தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கான நிவாரணமாக, இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் கல்வி அமைச்சில் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கான கொரியதூதுவர் HE Santhush Wonjin Jeong இதற்கான பத்திரத்தை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளித்துள்ளார்.

Tamil News