நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜயந்த ஜயசூரியவுக்கும், இலங்கைக்கான ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிராஞ்சேவுக்கும் இடையில் சந்திப்பொன்று நியூயோர்க்கில் உள்ள வதிவிடப்பிரதிநிதியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு முறைமை மற்றும் இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழுமம் ஆகியவற்றுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட வலுவான அறிக்கைக்கும் இதன்போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



