சட்டவிரோதமாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி மையங்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறையை குற்றமாகச் சீன அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையான வாடகைத் தாய் முறைகளுக்கும் சீனா கடுமையான தடை விதித்துள்ளதாகவும், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்வது நெறிமுறைகளை மீறும் குற்றவியல் செயலாகக் கருதப்பட்டுக் கடுமையான சட்டத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் ஜின்ருய் தெரிவித்துள்ளார்.



